Dec 13, 2008

நான்....

நான்….

சாருமதி

நடைமுறை வாழ்க்கைக்கும்

கற்பனை உணர்வுகளுக்கும்

இடையே சிக்கிக்கொண்டிருக்கும்

பெண்…

இங்கே நான்

சிதறியிருக்கும் மைத்துளிகள்

வெறும் வார்த்தைகள் அல்ல…

என் உணர்வுகளின் எழுத்துப் பரிமாணம்…

அத்தனைக் கதைகளும்

மேடையேறுவதில்லை…

அதுபோல் என் அத்தனை உணர்வுகளுக்கும்

நான்

எழுத்துருவம் கொடுக்கவில்லை…

சில உணர்வுகளும் அவற்றின்

வார்த்தை வடிவங்களும்

என் மனதோடு மட்டும்…

எனக்குள் பேசிக்கொள்ள மட்டும்…

மற்றவை

இதோ கண்முன்……..


4 comments:

சந்துரு said...

நீ எழுத்துருவம் கொடுத்த உன் சில உணர்வுகள் போதும் அம்மா உன் தமிழ் புகழை உலகம் எங்கும் எடுத்துரைக்க. சொல்நயமும், பொருள்நயமும் பொருந்தி வரும் உன் கவிநயத்தால், தமிழர் மனம் உருகுது அம்மா மெழுகுவர்த்திப் போல். கர்வம் கொண்டேன் உன் தமையன் என்று.

மு.இரா said...

பெண் என்றாலே, சிக்கிதான் கொள்வீற்களோ? உணர்வுகள் அத்தனையும் வெளிப்பட வேண்டும். கவிதைக்காக நீங்கள் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். உங்கள் கவிதை போல, வாழ்க்கையிலும் இருக்க வேண்டாம்.

Prabhu said...

அட, நீங்க ப்ளாக்குக்கு வந்ததயே கவிதையாவா? பேஷ்....

nila said...

//பெண் என்றாலே, சிக்கிதான் கொள்வீற்களோ? //
பல சமயங்களில் பெண்களின் உணர்வுகள் மறைமுகமாய் இருக்கும் போதுதான் தான் அவளுக்கு மதிப்பு.. தங்களைப் போன்ற ஒரு சில முற்போக்கு சிந்தனைவாதிகளை விட பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள்தான் அதிகம்... இதில் பெண்களும் அடக்கம்.... ஆனால் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகள் கட்டாயம் வெளிப்பட்டுவிடும்...

Post a Comment