May 27, 2009

என்னை மிகவும் சிந்திக்க வைத்த கேள்வி


தலைப்பை படிச்சதும் என்னவோ ஏதோனு நினைச்சுடதிங்க....
ரொம்ப சில்லியான கேள்வியத்தான் கேட்க போறேன்...
ரெண்டு நாள் முன்னாடி என் கதைல எழுதின மாதிரியே மெரினா கடற்கரைப் பேருந்து நிலையத்திலிருந்து அடையார் வரைக்கும் பல்லவன் தாழ் தள சொகுசுப் பேருந்தில் என் கதையைப் பற்றி சிந்தித்துக்கொண்டே பயணம் செய்துகொண்டிருந்தேன்...
திடீரென்று ஒரு வித்தியாசமான கேள்வி எனக்குள்... கதைல எழுதின மாதிரி பேருந்துக்கு யாராவது தீ வெச்சா எப்படி தப்பிக்கிறதுன்னு... எனக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு நினைச்சுக்காதிங்க...
பேருந்தை நோட்டம் விட்டதில் எளிதில் தப்பிப்பதற்கான வழிகளே இல்லாதது போல தோன்றியது... ஏனென்றால் தாழ் தள சொகுசு பேருந்தில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும்... சன்னல் வழியா தப்பிக்கிறதும் கொஞ்சம் சிரமமான காரியம்... எனக்கு இதுல இருக்குற டெக்னிகலான விஷயங்கள் எதுவும் தெரியாது... ரெண்டு நாலா மண்டைய குடைஞ்சுட்டு இருந்த கேள்வி இது... நம்ம நண்பர்கள்கிட்ட கிடைக்காத பதிலா??? அதான் இதை எழுதிட்டேன்... இப்படி ஒரு கேள்விய கேட்டதுக்காக பெரிய மனசு பண்ணி என்ன மன்னிச்சுட்டு கொஞ்சம் விளக்கம் குடுங்களேன் ப்ளீஸ்