Mar 24, 2009

தேர்தல் வந்தாச்சு.....


இங்கே பெயரளவில் மட்டுமே
குடியரசு......
தனிமனித சுதந்திரமும்
அடிப்படை உரிமைகளும்
கூறுபோட்டு விற்கப்படுகின்றன....
ஒரு ஓட்டு ரூபாய் 1000/-
இலவச இணைப்பாக
பிரியாணிப் பொட்டலம்....
முன் பதிவிற்கு
இப்போதே முந்துங்கள்....


Mar 16, 2009

புத்தம் வளர்த்த பூமி


புத்தம் வளர்த்த பூமி
இன்று
யுத்தக்களமாய் மாறி
இரத்தக்காவு வாங்கிக் கொண்டிருக்கிறது

சாவிற்கு ஒத்திகை பார்க்க
பதுங்கு குழிகள் மேடைகளாகின்றன...

சுதந்திர நாடுகளில்
தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே
குடியுரிமை......

செத்துப் போனத் தமிழனைக் காட்டி
உண்ணா விரத நாடகம் நடத்தி
தனக்குத்தானே உதவித்தொகையும்
அடுத்த வேலை சாப்பாட்டிற்கு
பிரியாணிப் பொட்டலம் சம்பாதித்துக்கொள்ளும்
எடுபிடி கட்சிக்காரர்கள்

கரன்சி நோட்டு வாசத்தையே
ஆக்சிஜனாய் சுவாசித்து வந்த
நம்மூர் அரசியல்வியாதிகள்
இப்போதெல்லாம் அவற்றை
தமிழனின் இரத்தத்தில் தோய்த்தெடுத்து
தின்று கொழுக்கிறார்கள்

இருக்காதா பின்னே
தமிழனின் இரத்தத்தில்
உப்பும் காரமும்
கூடுதல் அல்லவோ....

மனிதன் வாழ வழி காட்டத் தெரியாத
அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிடவும்
ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுவதற்கும்
வெட்கமாயில்லை..........

அங்கே...
அழிந்து கொண்டிருக்கும்
ஒரு சமூகம்....
இங்கே....
மானும் மயிலும் கட்டிப்பிடித்து
ஆடுவதைக் கைதட்டி ரசிக்கும்
ரோஷமில்லா ஆட்டு மந்தைகள்...

அங்கே...
தமிழ்த்தாய் ஒருத்தி
மானபங்கப் படுத்தப்படுகிறாள்
இங்கே...
நமக்கு மகளிர் தினம்
ஒரு கேடு...

மனிதா....
கொஞ்சம் யோசித்துப்பார்...
அடுத்த வீட்டில் எரியும் தீ
உன் வீட்டை எரிக்க
எத்தனை நேரம் ஆகும்????

ஒவ்வொரு தமிழனும்
தன்னிலை உணரும் வரை
இந்த அவல நிலை
மாறப்போவதுமில்லை ...
கதர்ச்சட்டைகளும் கரை வேட்டிகளும்
மாறவிடப்போவதும் இல்லை......

Mar 1, 2009

பெண்மை




இன்று ஒருவன்
நாளை மற்றொருவன்...
உரிமை கொஞ்சம் குறைந்தாலும்
குரல் கொடுப்பவர்களெல்லாம்
சத்தமின்றி விற்கிறார்கள்
பெண்மையை............

மூடநம்பிக்கை


விதவை எதிரே வந்தால்
போன காரியம் கெட்டுவிடுமாம்
பூனை குறுக்கே வந்தால்
அபசகுணமாம்.....
மூடநம்பிக்கையின் பிடியில்
குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுபவனே...
ஒரு நாள் நன்றாகக்
கண்ணாடியைப் பார்த்துவிட்டு போ...
என்ன நிச்சயம்...
மறுநாள் நீ உயிருடன் இருப்பாய் என்று????