Mar 16, 2009

புத்தம் வளர்த்த பூமி


புத்தம் வளர்த்த பூமி
இன்று
யுத்தக்களமாய் மாறி
இரத்தக்காவு வாங்கிக் கொண்டிருக்கிறது

சாவிற்கு ஒத்திகை பார்க்க
பதுங்கு குழிகள் மேடைகளாகின்றன...

சுதந்திர நாடுகளில்
தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே
குடியுரிமை......

செத்துப் போனத் தமிழனைக் காட்டி
உண்ணா விரத நாடகம் நடத்தி
தனக்குத்தானே உதவித்தொகையும்
அடுத்த வேலை சாப்பாட்டிற்கு
பிரியாணிப் பொட்டலம் சம்பாதித்துக்கொள்ளும்
எடுபிடி கட்சிக்காரர்கள்

கரன்சி நோட்டு வாசத்தையே
ஆக்சிஜனாய் சுவாசித்து வந்த
நம்மூர் அரசியல்வியாதிகள்
இப்போதெல்லாம் அவற்றை
தமிழனின் இரத்தத்தில் தோய்த்தெடுத்து
தின்று கொழுக்கிறார்கள்

இருக்காதா பின்னே
தமிழனின் இரத்தத்தில்
உப்பும் காரமும்
கூடுதல் அல்லவோ....

மனிதன் வாழ வழி காட்டத் தெரியாத
அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிடவும்
ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுவதற்கும்
வெட்கமாயில்லை..........

அங்கே...
அழிந்து கொண்டிருக்கும்
ஒரு சமூகம்....
இங்கே....
மானும் மயிலும் கட்டிப்பிடித்து
ஆடுவதைக் கைதட்டி ரசிக்கும்
ரோஷமில்லா ஆட்டு மந்தைகள்...

அங்கே...
தமிழ்த்தாய் ஒருத்தி
மானபங்கப் படுத்தப்படுகிறாள்
இங்கே...
நமக்கு மகளிர் தினம்
ஒரு கேடு...

மனிதா....
கொஞ்சம் யோசித்துப்பார்...
அடுத்த வீட்டில் எரியும் தீ
உன் வீட்டை எரிக்க
எத்தனை நேரம் ஆகும்????

ஒவ்வொரு தமிழனும்
தன்னிலை உணரும் வரை
இந்த அவல நிலை
மாறப்போவதுமில்லை ...
கதர்ச்சட்டைகளும் கரை வேட்டிகளும்
மாறவிடப்போவதும் இல்லை......

11 comments:

sivam said...

a buddin poet n a small villag of tamil naduu!!!!keep rockin d blog !!!nice wordings!!!

shangar said...

சொல்வதற்கு ஒன்றும் இல்லை...
செய்வதற்கும் முடியவில்லை...
நான் கொடுக்க ஏதும் இல்லை...
இதை தடுக்க யாரும் இல்லை...

சந்துரு said...

கல்லாக மாறி போன உலக தலைவர்களின் மனம், பணம் என்றால் உருகுதே பனிமழையாய், எங்கள் தமிழினம் அழிவதை கண்டு கல்லும் இரும்பாய் மாறியதே ஏனோ? கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி என்பதை நிருபிக்க வேண்டியதாலோ? “இப்படி ஒரு இனம் இருந்தது” என்பதற்குக்கூட அடையாளமற்றுப் போகச் செய்ய வேண்டும் என்ற சூழ்ச்சியை உலகம் உணர்ரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இரு தரப்பும் நிபத்தனை அற்ற போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அரசியல் திர்வு காண வேண்டும்.மீதம் இருக்கும் எம் மக்களையாவது காக்க வேண்டும் என்று இவ்வுலக தலைவர்களை இரு கரம் குப்பி கேட்டுக் கொள்கிறோம்.

Krishna said...

racist sinhalas should realize that overseas tamils would take revenge over the sinhalas if the sinhalas continue the genocide of tamils in NE srilanka ! Truly speaking, sinhalas can never escape from the war crimes of genocide of tamils!!! It is shame the whole world of nations still watch the genocide of tamils ! They all think that mere statements aginst the war is enough from their part !! it is shame, shame to the UN & the wolrd of nations!!
especially India bears the whole blame !!!

Anonymous said...

சாவிற்கு ஒத்திகை பார்க்க
பதுங்கு குழிகள் மேடைகளாகின்றன...//


மிக சிறப்பான வரிகளிவை....

என்ன சொல்ல!

எட்வின் said...

உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.

கல் மனங்கள் மாறாதவரை ...
கதறல்கள் கேட்கப்பட போவதில்லை.

கொடுமை.

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி

Ragu said...

செத்துப் போனத் தமிழனைக் காட்டி
உண்ணா விரத நாடகம் நடத்தி
தனக்குத்தானே உதவித்தொகையும்
அடுத்த வேலை சாப்பாட்டிற்கு
பிரியாணிப் பொட்டலம் சம்பாதித்துக்கொள்ளும்
எடுபிடி கட்சிக்காரர்கள்

கரன்சி நோட்டு வாசத்தையே
ஆக்சிஜனாய் சுவாசித்து வந்த
நம்மூர் அரசியல்வியாதிகள்
இப்போதெல்லாம் அவற்றை
தமிழனின் இரத்தத்தில் தோய்த்தெடுத்து
தின்று கொழுக்கிறார்கள்....

Fantastic wordings...
congrats....

nik said...

The poem is good....nice words and touching lines..but we can only feel for them...!:(

sakthi said...

இருக்காதா பின்னே
தமிழனின் இரத்தத்தில்
உப்பும் காரமும்
கூடுதல் அல்லவோ....

nalla pattunu kanathula adikira mathiri wordings

இரசிகை said...

thudippaana varikal..

வருண் said...

nila:

Just noticed that your poem has been nominated for TM awards.

Wish you good luck!

-varuN

Post a Comment