Dec 14, 2008

அப்பச்சி காவியம்அப்பச்சி காவியம்

கருவாச்சி காவியங்களும்
கள்ளிக்காட்டு இதிகாசமும்
ஆளும் இந்த பூமியில்
நான் படைக்கிறேன்
என் தாத்தனுக்காக
ஓர் அப்பச்சி காவியம்

அரைக்கால் டவுசரும்
சைக்கிள் டயருமாய்
ஓடித்திரிந்த
சிறுவயது தாத்தன்….
இன்று பேரக் குழந்தைகளின்
ஆர்ப்பாட்டங்களுக்கும்
விசைத்தறியின்
உருட்டும் சத்தங்களுக்கும் இடையே
ஓய்வெடுக்கத் துடிக்கும்
சக்கரமாய்………

அந்த பத்து வயது
சிறுவனுக்கும்
இந்த எழுபது வயது
கிழவனுக்கும்
இடையேயான
காலகட்டங்கள்
எத்தனை உணர்வுப்பூர்வமானவை……….

அத்தை மகளை மணந்து
அருமையாய்
நான்கு குழந்தைகளைப்
பெற்று…..
இனிமையாய்
தொடங்கிய வாழ்க்கை……..

பெற்றதென்னவோ
நான்கு குழந்தைகள்….
அதிலும் மிஞ்சியது மூன்று…
ஆனால்…..
தகப்பனாய் இருந்து
தனியாய் வளர்த்தது
எட்டு…….

வளர்த்த கிடா
மாரில் பாயும் என்பார்கள்……
ஆனால்……
என் அப்பாச்சி வளர்த்த பாசக்கார உறவுகளோ
முதுகில் பாய்ந்தனர்…

லாரியில் அடிபட்டு
சப்த நாடியும் அடங்கிக் கிடக்கையில்…..
“தாத்தா மாத்திரை” என்ற
என் ஒன்றரை வயது
குரலுக்கு மட்டும்
உன் உயிர் செவிமடுத்தது என்ன……..

நீ வாங்கித்தந்த
பாப்பின்ஸ் மிட்டாயும்
பேரீச்சம்பழமும்
தாய் கொடுத்த
பாலைப் போல்
என் அப்பச்சி எனக்களித்த ஊட்டச்சத்து…….

நீ கட்டிய அழகிய வீடு
இடிக்கப்பட்டபோது
நான் மட்டுமே உணர்ந்தேன்
உன்னுள் ஒரு மாளிகை
நொறுங்கி விழும் அதிர்வுகளை……

அழுதுகொண்டே ஓடும்
யமுனை நதியின்
நிசப்தம்..
பலசமயங்களில் உன்னில்….

பட படவென
கல கலக்கும்
என் அம்மாச்சி முன்
பல நேரங்களில்
வாயில்லா பூச்சியாய்...
உன்னுடன் பேசும்
உறவுகளின் மத்தியில்
பல சமயங்களில்
மௌன குருவாய்...

பேரன் பேத்திகளின்
விளையாட்டுப் பொருளாய்....
தோழனாய்….

நான் பெற்ற
இப்பிறவிபயன்
என் சந்ததியினரும் பெற்றால்
அவர்களே புண்ணியாத்மாக்கள்.

பூதம் காக்கும் புதையல் கூட
ஒருநாள் வாரி இறையும்…
ஆனால்….
உன் உணர்ச்சிகள் யாவும்..
உன் மனப்பெட்டகத்துள்..
காற்றுப்போன பலூனாய்…

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்……
உன் மகளே என் தாயாவாள்…..

இந்த அப்பச்சி காவியம்
“முற்றும்” என எழுதபெற
பழைய இதிகாசம் அல்ல…
ஒவ்வொரு நாளும் தொடரும்
ஒரு நினைவுச்சரித்திரம்……..

12 comments:

prasanna said...

En Iniya Thozhi,
Intha Kaaviyam Eyatriyatharkaga
Unakku Ennudaiya Vazhthukkal.......
Unathu kaaviyangal melum thodara en Vazhthukkal........

Natpudan,
Unathu Arumai Thozhan (K.P.V)

Me said...

இளகிய மனதுடையாள் நீ !!!
all your writings are good and sensible.. keep posting

E said...

anubhavangal kai korkkinrana

manvasanaiuytan
cibi

sakthi said...

நீ வாங்கித்தந்த
பாப்பின்ஸ் மிட்டாயும்
பேரீச்சம்பழமும்
தாய் கொடுத்த
பாலைப் போல்
என் அப்பச்சி எனக்களித்த ஊட்டச்சத்து…….

meendum en palaya gnabagangalai kilari vittuvitergal

sakthi said...

unarvupoorvamana padaipu

thodarnthu eluthungal

sakthi said...

பூதம் காக்கும் புதையல் கூட
ஒருநாள் வாரி இறையும்…
ஆனால்….
உன் உணர்ச்சிகள் யாவும்..
உன் மனப்பெட்டகத்துள்..
காற்றுப்போன பலூனாய்…

arumai intha uvamai

sakthi said...

try to remove word verification ma

nila said...

i have removed it now :)

நட்புடன் ஜமால் said...

மிக அருமையா இருக்கு.

வித்தியாசமான அனுகுமுறைகள் தேவைதான்

அழகாயிருக்கு.

cheena (சீனா) said...

அன்பின் நிலாமகள்

தாத்தனுக்காக ஒரு காவியம் ப்டைத்தமை நன்று - அருமையான மலரும் நினைவுகளைத் தொடுத்த விதம் அருமை

நல்வாழ்த்துகள் நிலாமகள்

" உழவன் " " Uzhavan " said...

//இந்த அப்பச்சி காவியம்
“முற்றும்” என எழுதபெற
பழைய இதிகாசம் அல்ல…
ஒவ்வொரு நாளும் தொடரும்
ஒரு நினைவுச்சரித்திரம்…….. //

உணர்வுப்பூர்வமான அழகிய படைப்பு..

அன்புடன்
உழவன்

nila said...

சீனா, உழவன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
இந்த பெருமை யாவும் என் தாத்தனையே சேரும்.......

Post a Comment