உடல் பொருள் ஆவி
அனைத்தும் உனக்காய்
காதலாகி கசிந்துருகி
கண்ணீர்மல்கி யார் என அறியாமலே
காத்திருக்கிறேன் உனக்காக..
முகம் அறியா காதலனே
என் முகவரி தேடி
வந்திடுவாயா.........????
தேடல், தேவை
எதிர்பார்ப்பு, கனவு..
இவற்றை இன்பமாய் நினைத்து
வாழ்க்கையை வாழ்க்கையாய்
வாழ்பவனே மனிதனாகிறான்..
தேடல் இலக்கின்றி போகும்பொது
அவன் பைத்தியக்காரனாகிறான்
தேவைகள் எல்லை மீறும்போது
துரோகியாகிறான்
ஆசைகள் அளவின்றி வெறியாய் மாறும்போது
மிருகமாகிறான்
கனவுகள் பொய்க்கும் பொது
ஏமாளியாகிறான்
எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படும்போது
சவம் ஆகிறான்
ஏற்றமும் தாழ்வும் நிறைந்த
வாழ்வில்..
தாழ்வு நிலைக்கே
செத்துச் சுண்ணாம்பாகிவிட்டால்
இவன் ஏற்றதோடு
மனிதனாய் வாழ்வது
எப்போது.........??
குழந்தை…….
தானாய் அழுது…
தானாய் சிரித்து…
ஆசை ஏமாற்றம்
கள்ளம் கபடம்
எதுவுமே அறியாமல்
தன்னையே கூட உணராமல்
ஆனந்தமாய் சிரித்துக் கொண்டிருக்கும்
இயற்கையின் அதிசயம்…
வாழ்க்கையின் போராட்டங்களும்
சூட்சுமங்களும் தெரியாத
அதிருஷ்டசாலி…
வாழ்க்கை வாழ்வதற்கே
என்ற புரட்சிமொழி வேண்டாம்
பேர் வேண்டாம் புகழ் வேண்டாம்
நாலு பேருக்காக நடிக்கும்
இந்த அழுக்கு முகம் வேண்டாம்…
அதற்காக…
வாழ்க்கையே வெறுத்துவிட்டது என
சித்தாந்தமும் சந்நியாசமும் பேசவில்லை
எனக்கு ஆனந்தம் வேண்டும்..
அதிலும் பேரானந்தம் வேண்டும்..
அதனால் தாயே..
என்னை மீண்டும்
உன் கருவுக்குள் இழுத்துக்கொள்…
மீண்டும் குழந்தையாய் பிறந்து
சில காலம் ஆனந்தமாய் வாழ்ந்திடுவேன்…
ஈஷா…
ஆம்... ஒவ்வொரு மனிதனுள்ளும்
ஓர் ஈசன் வாழ்கிறான்…
எனக்குள்ளும் ஒரு ஈசன்…
நான் சிரிக்கையில்
என் சிரிப்பலைகளாய்….
நான் அழுகையில்
என் கண்ணீர்த் துளியாய்…
நான் இமைக்கையில்
என் இமைப் பொழுதாய்…
என் உணர்வுகளாய்…
என் அசைவாய்… என் உளமாய்…..
என் உணர்வுகளைப் பிரதிபலிப்பவன்……
“ஓம்” எனக் கூறுகையில்
அடிமனதின் ஆழத்திலிருந்து எழுபவன்
எனக்குள்ளும் ஓர் ஈசன் இருக்கிறான்
என நான் உணரக் காரணமாயிருந்த
ஈஷா…
நான் உன்னடி சேர வேண்டும்…….
வீரர்களின் சாகச மேடை மட்டுமல்ல.
உணர்ச்சியற்ற முகத்துடன்
உலா வரும் கோமாளிகளின்
உணர்வுகளின் சாவு மேடையும் கூட…….