Jan 9, 2015

இரவின் காதலி

இரவுகளின்
காதலி நான்

ஒளியின் ஆர்பரிப்பு
அடங்கிப் போன
மீளா இரவுக்காக
காத்திருக்கும்
காதலி நான்

உறங்கும் காதலன்
தோள் சாய்ந்து
உறங்காமல்
இருளை சூல் கொண்ட
இரவின் காதலி நான்

ஆயிரம் கனவுகளின்
ஒற்றை ஊன்றுகோல்
ஆயிரம் ஏமாற்றங்களின்
ஒற்றை ஆறுதல்

சப்தங்களும்
நயன பாஷகைளும்
அற்றுப் போன நிலையில்

விடை தெரியா
கடிதங்களின்
உணர்வுகளுடன் சல்லாபிக்கும்
இரவின் ஒருதலைக்
காதலி நான்!!!


2 comments:

ஊமைக்கனவுகள் said...

ஆயிரம் கனவுகளின்
“““ஒற்றை ஊன்றுகோல்
ஆயிரம் ஏமாற்றங்களின்
ஒற்றை ஆறுதல்“““““““

என்றவரிகளைக் கடக்க வெகுநேரமானது..

உன்னதம்.

நன்றி

nila said...

நன்றி!!!

Post a Comment