Apr 14, 2015

விடியல்

சில நொடி சந்தோஷத்தின்
ஊக்கத்தொகை
சில ஆண்டுகளுக்கான
கண்ணீர் விதி என


சிரிப்பின் முடிவில்
இரு க்ஷணங்கள்
என்ன காத்திருக்கிறதோ
என தொக்கி நிற்கின்றன

கிழமைக்கு ஒரு சாமியென
அட்டவணை போட்டுத் தரும்
அம்மாவும்

உனக்கு நேரம் நல்லா இருக்கு கண்ணு
எல்லாம் நல்லதா நடக்கும் என
அம்மாச்சியும்
ஆறுதல் சொல்ல ஆரம்பித்து
ஆண்டு பத்தாகிறது

ஆனால்..
எனக்கான விடியல் மட்டும்
நனைந்த விறகுக்கட்டையாய்
மூலையில் விழுந்தே  கிடக்கிறது..

5 comments:

Unknown said...

இன்றைய காலகட்டத்தில் சின்னச் சின்னச் சந்தோசங்கள் மட்டும் நமக்கு போதுமானதாயிருக்கு யமுனா - ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் கத்தாரை விட்டு இந்திய செல்லவேண்டும் என ஆசை / எண்ணம் வந்து வந்து செல்லும். மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் அது நிறைவேறாத ஆசையே.

""வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா முதுமையே சுகமா
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே""

வருண் said...

இன்னுமா விடியவில்லை?! அம்மாவும், அம்மாச்சியும் சொன்ன விடியலும் நீங்க எதிர்பார்த்த விடியலும் வேறு வேறு என்று நினைக்கிறேன். :) This misunderstanding is because of "generation gaps", I suppose!

nila said...

varun :)

ஊமைக்கனவுகள் said...

மெல்ல அலையலையாய் இறுதி வரியில் உச்சம்பெற்றெழுகிறது உங்களின் கவிதை..

வேறு சொல்லத் தெரியவில்லை.

நன்றி.

nila said...

நன்றி ஊமைக்கனவுகள் :)

Post a Comment