Jul 27, 2009

உன் பெயரே என் பெயராய்



ஒவ்வொரு முறை கையெழுத்திடும் போதும்
கடைசிப் புள்ளியில் ஒரு நிமிடம்
தயங்கி நிற்கிறேன்
உன் பெயரையும் பின்னோடு எழுதிடும்
ஆவலுடன்..

27 comments:

ஹேமா said...

நிலா,அருமை.கவிதை சின்னது
ஆனாலும் உஙகள் காதல் பெரிது.

நட்புடன் ஜமால் said...

ஆவலில் தெரியுது காதல் ...

பாலா said...

அப்பப்பா அழகு
இதெல்லாம் பெண்ணால் மட்டுமே உணர இயலும்
அருமை மா

துபாய் ராஜா said...

அருமை.அருமை.

வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா said...

nalla irukku.
vaalthukkal.

sakthi said...

அருமை நிலா

"உழவன்" "Uzhavan" said...

அருமை. சில சமயங்களில் அவன் பெயரே அவள் பெயராகிப்போவதுமுண்டு.

ஆபிரகாம் said...

காதல்!

சத்ரியன் said...

இதென்னத்தைக் கண்டீங்க.
இன்னும் என்னென்னவெல்லாமோ செய்யப் போகுது!

தொடர்ந்து எழுதிட்டே வாங்க நிலா.

நாமக்கல் சிபி said...

அருமை! கலக்கல்!

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஒவ்வொரு முறை கையெழுத்திடும் போதும்
கடைசிப் புள்ளியில் ஒரு நிமிடம்
தயங்கி நிற்கிறேன்//

அட! அடுத்த வரிக்கு போவறதுக்கு முன்னாடி இந்த ஒரு நிமிட் சஸ்பென்ஸ் அழகு...

////அழகான எல்லாவற்றையும் பதிவு செய்கிறேன்////

நெறைய பதிவு செய்யுங்க! தொடர்ந்து பட்ச்சுகினே வர்றோம்...!!!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

தினேஷ் said...

/நிமிடம்
தயங்கி நிற்கிறேன்
உன் பெயரையும் பின்னோடு எழுதிடும்
ஆவலுடன்.. //

ஆவலுடன் எழுத ஏன் தயங்குறீங்க ..

nila said...

//ஆவலுடன் எழுத ஏன் தயங்குறீங்க ..//
அதற்கான உரிமை இன்னும் கிடைக்காததால்

சம்பத் said...

கவிதை சூப்பர்....

தினேஷ் said...

/அதற்கான உரிமை இன்னும் கிடைக்காததால்//

யாருப்பா அது சீக்கிரம் அக்காவுக்கு ஒரு உரிமை பார்சல் கொடுங்கப்பா..

nila said...

//யாருப்பா அது சீக்கிரம் அக்காவுக்கு ஒரு உரிமை பார்சல் கொடுங்கப்பா..//

அண்ணா... எந்த ஊர்ல உரிமை பார்சலா கிடைக்குது????

தினேஷ் said...

//அண்ணா... எந்த ஊர்ல உரிமை பார்சலா கிடைக்குது????//

இப்பல்லாம் வேகமா எல்லாமே பார்சல்தான் . உங்களுக்கு யார்ட்ட வேணுமோ அவர்ட்ட கேளுங்க ..
இல்லேணா இங்க பெங்களூர்ல கிடைக்கும் உரிமை பார்சலா..

ஹி ஹி ஹ் ஹி

NILAMUKILAN said...

அழகான கவிதை. உங்கள் உணர்தலும் புரிதலும் தெளிவு.

JSTHEONE said...

உன் பெயரையும் பின்னோடு எழுதிடும்
ஆவலுடன்.. nalla oru unarchi velipaadu.. kalakunga...

expecting more from u...

த. ஜார்ஜ் said...

பளிச்சென்று அட்டகாசமான படங்கள்.பதில் சொல்ல முடியாத கேள்விகள்.ம்.நல்லாத்தான் இருக்கு நிலா.

nila said...

ஹேமா, ஜமால் அண்ணா , நையாண்டி நைனா, பாலா, சூரியன், சக்தி, துபாய் ராஜ, ஜாம்பாஜார் ஜக்கு, நிலா முகிலன், ஜார்ஜ், jstheone, சம்பத், சத்ரியன், சிபி, ஆபிரகாம், உழவன்
அனைவருக்கும் நன்றி :)

Venkata Ramanan S said...

Gud 1 :)

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

nila said...

நன்றி யாத்ரா...
நன்றி ரமணன்..

SUMAZLA/சுமஜ்லா said...

காதலியின் எண்ணவோட்டம்
கனவில் தெரியும் வண்ணதோட்டம்

யாசவி said...

:-)

www.eraaedwin.com said...

அன்பின் நிலா, எல்லோரும் சொல்வது போல் என்னால் சொல்லிக் கடந்துவிட முடியவில்லை. வரிகளுக்குள் பதுங்கிக் கிடக்கும் வலியும் , ஏக்கமும் என்னை மரியாதையோடு நிலாவின் பக்கம் திருப்புகிறது

Post a Comment