
வலிகளின்றி வாழ்க்கை இல்லை...
நான்...
வலிகளை ம(றை)றக்கத் தெரிந்தவள்...
அடக்கக் கற்றுக்கொண்ட கோபங்களுக்கு
ஒரே வடிகாலாய் என் கண்கள்...
வெடிக்க நினைக்கும்போதே
ஊமையாய்க் கரைந்துவிடும்...
மறுக்கப்பட்ட கனவுகளோடும்
நிராகரிக்கப்பட்ட விருப்பங்களோடும்
புன்னகையோடு வாழப் பழகியவள்...
இழக்க விரும்பா
குழந்தைத்தனத்தோடு
வாழ்கையை முழுமையாய்
வாழ்ந்திடத் துடிக்கிறேன்...
என்னைப் புரிந்துகொண்டோர்
மிகச் சிலர்
புரியாதவர்கள் பிரயத்தனப்பட்டு
என்னைக்
காயப்படுத்த வேண்டாம்
காயக்கிடக்கும் காயங்களுக்கு
தண்ணீர் ஊற்றிச் செல்லவேண்டாம்...
10 comments:
ரொம்ப நல்ல கவிதை, உணர்வு தளும்பும் கவிதை, வலிகளின்றி வாழ்க்கையில்லை தான், உண்மை.
நான்...
வலிகளை ம(றை)றக்கத் தெரிந்தவள்...]]
காயக்கிடக்கும் காயங்களுக்கு
தண்ணீர் ஊற்றிச் செல்லவேண்டாம்...]]
அருமை.
இழக்க விரும்பா குழந்தைத்தனத்தோடு வாழ்கையை முழுமையாய் வாழ்ந்திடத் துடிக்கிறேன்...
Sooooperu....
Keep it Up
நல்லாயிருக்கு படமும், கவிதையும் !
அடுத்து சோகம் இல்லாமல் உற்சாகமான் கவிதை ஒன்னு போடுங்க நிலா !
//வலிகளை ம(றை)றக்கத் தெரிந்தவள்...//
உண்மைதான்
கவிதை படம் இரண்டும் அழகு.......
//கோபங்களுக்கு
ஒரே வடிகாலாய் என் கண்கள்...
வெடிக்க நினைக்கும்போதே
ஊமையாய்க் கரைந்துவிடும்...//
மிக அற்புதமான வரிகள். மிகவும் ரசித்தேன். நன்றி.
//இழக்க விரும்பா குழந்தைத்தனத்தோடு வாழ்கையை முழுமையாய் வாழ்ந்திடத் துடிக்கிறேன்...//
nice picture
தங்களது பாஸ்போர்ட் பதிவின் வழியாக வந்தேன். கமலஹாசன் ஒரு வானொலிப் பேட்டியில் சொன்னார், வலிகளும் வேதனைகளும் நம்மை உயிருடன் இருப்பதை உணரச்செய்கின்றன, என்று.
கவிதை அருமை.
கவிதை இயல்பாய் இருக்கு நிலா.நல்லாயிருக்கு.
ARUMAIYANA,,,VARIKAL ,, VAZTHUKKAL,,,,
Post a Comment