May 10, 2014

மௌனத்தின் மறுமொழி

நுரையீரல் முழுதும்
நிறைத்துக்கொண்ட
அவன் வாசம்
துணைநின்ற
தனிமையின் உச்சத்தில்

அவன் அருகின்றி
பிரக்ஞை
அற்றுப்போன
தருணங்கள்
மரணிக்கக்
காத்திருக்கின்றன!!!

அம்மரணத்தின்
மறுமுனையில்
ஜனனிக்கக் காத்திருக்கும்
கனவுகளுக்காக நான்!!!

இயல்பிற்கப்பாற்பட்ட
மொழியின் மௌனம்
சாத்தியமான
வேளைகளில்
விழிநீரின்
ஒற்றைப் பரிமான
வரைகோடுகள்
அவன் திசைநோக்கியே
இடமாற்றம் பெறுகின்றன!!!


6 comments:

இராஜராஜேஸ்வரி said...

மௌனத்தின் மறுமொழியாய்
ஜனனமும் மரணமும்....!

வருண் said...

மெளனம் மறுமொழி சொலவதெல்லாம் நம்ம நிலாவுக்கு மட்டும்தான். :)

"Thalaivan" will be flattered for thalaivi's true-poem! :-)

nila said...

நன்றி இராஜராஜேஸ்வரி :)

nila said...

வாங்க வருண் :)
நன்றிகள் பல !!!

ஏதோ மௌனமாச்சும் மறுமொழி சொல்லுதே :)

ஊமைக்கனவுகள் said...

விழிநீரின் இடமாற்றம்
கவிதையை இன்னொரு களத்திற்கு எழுத்துச் சொன்றுவிடுகிறது.

இவ்வளவுநாள் எப்படி இவற்றைப் பார்க்காமல் இருந்தேன்..?

nila said...

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்கநன்றி ஊமைக்கனவுகள் :)

Post a Comment