Dec 6, 2011

தனிப்பறவை


இனம்புரியா உணர்வுகளின் 
மேகக்கூட்டம்
எப்போதும் மனதுள்
மூட்டமிட்டுக்கொண்டே..

அதிகபட்ச சோகத்தின் வெளிப்பாடாய்
சந்தோஷமும்...
அதிகபட்ச சந்தோஷத்தின் வெளிப்பாடாய்
சோகமும்...
பிரம்மாண்ட கோபுரத்தின்
நிழலாய் மாறி
என்னை அழுத்திக்கொண்டிருக்க...

மழை விட்டுச்சென்ற
இளம் ஈரமும்..
இலையுதிர் கால
மரங்களை நீங்கிய
காய்ந்த இலைகளும்...
இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சமேன
என்னுள் பாரமேற்றியபடி...

சிறுசிறு ஆசைகளும்  
ஏக்கங்களும் சேர்த்து வார்க்கப்பட்ட 
கனவுக்கூட்டில் 
ஆங்காங்கே சில கயிறுகள்
அறுந்து விழுவதுபோல் 

காற்றின் திசையில் 
ஒரு தனிப்பறவை..
எனக்கென மட்டும் 
பல கதைகள் கூறிச்செல்வதாய் 

என் தனிமைப் பயணங்களில் 
ஏதோ ஒன்று 
ஏதுமற்ற வெற்றுவெளியில் 
முடிந்துவிடுவதாய் 
இப்படி.. 
எண்ணற்ற பிரமைகளின் 
பிரம்மாவாய் என் மனம் 
புரிதலும் 
புரிதல் நிமித்தமும் 
என்ற போராட்டம் நடத்தி 
மாநாடு போட்டு.. 
ஒன்றும் புரியாமல் மீண்டும் 
குழப்பத்திலடங்கி

எதற்குமே விளக்கம் 
கிடைக்காவிடினும் 
என் மனம் 
ஒற்றை நொடி தள்ளி நின்று 
ரசித்துக்கொண்டுதான் இருக்கிறது.. 

என்னையும் 

என் எண்ணங்களின் நீட்சியையும்!!!! 

8 comments:

வருண் said...

lonely bird?

***என் மனம்
ஒற்றை நொடி தள்ளி நின்று
ரசித்துக்கொண்டுதான் இருக்கிறது..

என்னையும்

என் எண்ணங்களின் நீட்சியையும்!!!!***

யார் சொன்னா தனிமையில் இனிமை காணமுடியாது என்று? :-)

without title said...

'எண்ணற்ற பிரமைகளின் பிரம்மா' really liked it..

without title said...

'எண்ணற்ற பிரமைகளின் பிரம்மா' really like it...

PUTHIYATHENRAL said...

* உச்சிதனை முகர்ந்தால்”.!
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!
* பெரியாரின் கனவு நினைவாகிறது
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று!
* தமிழகத்தை தாக்கும் சுனாமி!
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!
* இந்தியா உடையும்! ஆனா உடையாது .
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!

Subramanian said...

//மழை விட்டுச்சென்ற
இளம் ஈரமும்..
இலையுதிர் கால
மரங்களை நீங்கிய
காய்ந்த இலைகளும்...//நல்ல ரசனையின் விளைவு அருமை தொடருங்கள்.

nila said...

நன்றி வருண்
நன்றி சுந்தர்
நன்றி வே. சுப்ரமணியன்

Unknown said...

//புரிதலும்
புரிதல் நிமித்தமும் // சொல்லாடல் அழகு...

முழுதும் அருமை :)

nila said...

நன்றி விடுதலை :)

Post a Comment