Feb 22, 2011

நீயற்ற பொழுதுகள்

பின்னோக்கி முன்னோக்கி
எங்கெங்கோ ஓடி அலைந்தும்
கடைசியில் உன் முகம் நோக்கிடவே
கூடடைகின்றன உனக்கான 
என் நினைவுகள்...


இடைவெளி தண்டனையில் 
கணக்கிடுவதிலேயே 
கடந்து போகும் நாட்கள்..

உன் வெட்கச் சிரிப்பின்
நினைவுகளில் 
ஒற்றை நொடிப்பொழுது  
கோடிட்டுப்போகும் புன்னகை...

ஒவ்வொரு முறையும்
நீ உன் காதல் சொல்கையில் 
கண்ணோரம் துளிர்த்து நிற்கும்
கண்ணீர்த்துளி...

நீயின்றி எனைப் பார்க்கையில்
ஓடி வந்து கைகோர்த்துக்கொள்ளும்
கடற்கரை மணலும் 
ஆற்றங்கரைக் காற்றும்...

உன்னோடில்லா பொழுதுகள்
அத்தனையும் 
நம் நினைவுகளுடனே.... 

ஒவ்வொரு மணித்துளியும்..
உன்னுடன்
உன்னுடையவளாய் 
உன்னருகிலேயே 
உனக்காக மட்டுமே 
வாழ்ந்திட .......

நான்.......  







15 comments:

SK said...

இந்த ஒவ்வொரு மணித்துளியும் படிக்கும் போது 'இருவர்' கவிதை நினைவுக்கு வர்றதை தவிர்க்க முடியலை.. :)

மற்றது எல்லாம் ரொமான்ஸ் .. நான் பழகாத பாடம்.. :)

nila said...

இருவர் கவிதையா??? லிங்க் குடுங்களேன்

SK said...

பிரகாஷ் ராஜ் மற்றும் தபு பாடுவது போல வரும்.

http://mindstates.wordpress.com/2007/01/10/unnodu-naan-iruntha-iruvar/

http://www.youtube.com/watch?v=j9Bm7hQoywk

நீங்க கேட்டு இருப்பீங்க.. :)

ஜெகதீஸ்வரன்.இரா said...

//ஒவ்வொரு முறையும்
நீ உன் காதல் சொல்கையில்
கண்ணோரம் துளிர்த்து நிற்கும்
கண்ணீர்த்துளி...//

கண்ணீர் துளியின் தேடல் நிதர்சனம்.
மிகவும் அருமை.

nila said...

கேட்டிருக்கேன்... ஆனா இந்த கவிதை அதை தழுவி எழுதலை :) அடுத்தமுறை கவனமா இருக்கேன்

SK said...

ஐயகோ.. நான் சொல்றது தப்பா புரிய படுதா... இல்லை நான் சொல்றதே தப்பா இருக்கா :(
எனக்கு அந்த வார்த்தை கேட்ட உடனே .. இந்த கவிதை நினைவு வந்துச்சின்னு தான் சொன்னேன்.. :(

nila said...

ada.. kavanama irukkennu than sonnen :)

வருண் said...

***உன்னோடில்லா பொழுதுகள்
அத்தனையும்
நம் நினைவுகளுடனே....

ஒவ்வொரு மணித்துளியும்..
உன்னுடன்
உன்னுடையவளாய்
உன்னருகிலேயே
உனக்காக மட்டுமே
வாழ்ந்திட .......

நான்....... ***

நல்லாயிருக்கு, நிலா! :)

முல்லை அமுதன் said...

vaazhthukkal.
mullaiamuthan

Unknown said...

//உன்னோடில்லா
பொழுதுகள்
அத்தனையும்
நம் நினைவுகளுடனே.... //

"நம் நினைவுகளுடனே"...
உணர்வின், உறவின் முதிர்ச்சியை சொல்லும் வரிகள்...

நல்லாயிருக்கு நிலா. வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

ஒவ்வொரு மணித்துளியும்..
உன்னுடன்
உன்னுடையவளாய்
உன்னருகிலேயே
உனக்காக மட்டுமே
வாழ்ந்திட .......

நான்....... /

உணர்த்தும் அர்த்தம் பொதிந்த வரிகள் அருமை.

அம்பாளடியாள் said...

கவிதை அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பகிர்வுக்கு .............

மகேந்திரன் said...

அழகான சொற்களால்
கூடுகட்டிய மணிமண்டபம் போல
கவிதை அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

இது என் முதல் வரவு.

மகேந்திரன் said...

தமிழ்மணம் 1

Kar said...

Unnodilla pozhuthugal...migavum arputhamana unarvuk kavithai nil a.vazhthukkal.

Post a Comment