Feb 1, 2011

உயிர் பிணம்

காத்திருப்புகள் கடமையாய்..
களவு போன நிமிடங்களின் நினைவுகளோடு மட்டும்..
அரசமரநிழலினூடே மின்னும்
சூரிய நட்சத்திரங்களுக்குத் தெரியும்
காத்திருப்பின் அர்த்தம்...
எங்கோ தொலைந்து போய்க்கொண்டே இருக்கின்றன
எனக்கான அத்தனையும்...
சலனமில்லா ஒற்றையடிப்பாதையும்
இடுகாட்டு சாம்பல் வாசமும்
எரிக்கப்படக் காத்திருக்கும் 
உயிர் பிணத்திற்கு 
ஏதேதோ கூறிச்செல்வதாய்..
நீண்ட நெடு முற்றத்தில்
தனியாய் கிடக்கும் 
ஒற்றை சாய்வு நாற்காலியும்...
மேல்துண்டும் ..
அழுத்தும் தனிமையை உணர்த்துவதாய்.. 
பேசுவதற்காய் ஆயிரம் வார்த்தைகள்
சிதறிக்கிடப்பினும்...
தேடுவதற்கான தேவை 
இல்லாமலேயே போய்விட்டதாய்..
உணர்வுகள் மறத்துப்போயும்
ஒற்றை ஆறுதல்...

நாளை 
கல்லறைச் சருகுகள் துணையிருக்கும் எனக்கு... 




12 comments:

வருண் said...

Hi Nila!

Good to see you posting after a poem after long time! Let me read your poem and comment on that later. :)

nila said...

hi varun..
i posted one last month

வருண் said...

"மீண்டும் வருகிறேனை" இப்போத்தான் பார்க்கிறேன், நிலா. :)

நெறையாத்தர திரும்பத் திரும்ப வாசிச்சாத்தான் எனக்கு உங்க கவிதை புரிவதுபோல இருக்கும். புரிந்த பிறகு காமெண்ட் எழுதுறேன் :)

nila said...

ஆஹா.. மொத்ததுல நல்லா குழப்பவாதி நான்னு நினைக்கிறன்

வருண் said...

I am not confused. To me, you sound very very serious! From the title to end! so, I dont know what to say.

Am I imagining? May be.

மதுரை சரவணன் said...

//தேடுவதற்கான தேவை
இல்லாமலேயே போய்விட்டதாய்..
உணர்வுகள் மறத்துப்போயும்
ஒற்றை ஆறுதல்...//

அருமை. வாழ்த்துக்கள்

nila said...

வருண்.. இன்னொரு நண்பர் கொஞ்சம் குழப்புறேன்னு சொன்னார்.. அதன் உங்களுக்கும் அதே உணர்வோனு நினச்சேன்...

nila said...

நன்றி மதுரை சரவணன்

Unknown said...

திரும்பவும் ஒரு நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்! ரெண்டுநாள் முன்னாடியே படிச்சேன், ஆனா திரும்பவும் படிச்சுட்டுதான் பின்னூட்டம் எழுதனும்னு இருந்தேன்!ரொம்ப அழுத்தமான வரிகள்... இடையில் செருகியிருக்கும் அர்த்தங்களை எடுத்துக்கொள்ள அச்சபடகூட வைக்கிறது!

nila said...

@விடுதலை- நன்றிகள் பல .... :)

Anonymous said...

I like this concept. I visited your blog for the first time and just been your fan. Keep posting as I am gonna come to read it everyday..
Kid Rock Tickets

Kar said...

Chaaru இடுக்காட்டு சாம்பல் வாசமும் ஒற்றையடி பாதையும்...,வாழ்க்கையில் எல்லாம் பார்த்து சலித்து விட்ட உயிர் ஒன்றுக்கு ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கும். மரணம் தழுவுதல்.ஒரு அன்பின் துளி வீழ்ந்தாலும் உயிர்த்தே இருந்து விட துடிக்கும் மனித மனம், மரணத்தை தேடி நோக்க எத்தனை விரக்தி அடைந்திருக்க வேண்டும்.அவர்கள் இடுகாட்டோடு ரொம்ப முன்னமே பேசி பழகி போய் விடுகிறார்கள்.u have opened up a new dimension of telling how loneliness at an old age befriends death. Beautiful one here.��

Post a Comment