Jan 6, 2014

கொஞ்சமாய் வீட்டு ஞாபகம்


கையை உதறிவிட்டு
ஓடும் குழந்தையாய்
திசை மறந்து
ஓடிசெல்கின்றன நினைவுகள்
கடிகார முட்களைப் போல்
துரத்திப் பிடித்தபடி ஒன்றும்
விட்டு விலகியபடி மற்றொன்றும்

கடந்து செல்லும் மனிதர்களில்
யாரோ ஒருவரின்
ஏதோ ஒரு சாயலோடு
சில நிகழ்வுகள் சில நினைவுகள்
பிடித்த பாட்டை முணுமுணுப்பதுபோல்
நாள்முழுதும் நீங்காமல்


இருபது நிமிட
தொலைப்பேசுதலில்
என் தூரத்து உலகிற்கும்
எனக்குமான இடைவெளியை
நிரப்பப் போராடும்
அம்மாக்களும் அம்மாச்சியும்..

நண்பனின் முகநூல் பக்கத்தின்
பழைய நாட்குறிப்பிலிருந்து
புதிதாய் பகிரப்பட்ட
ஒற்றைப் புகைப்படமுமே 

இழந்தவற்றிற்கான
ஒற்றைப்பருக்கை இழப்பீடு...
பார்த்து பேசிச்சிரிக்க
பழகிய மனிதரில்லாமல் 
ஏங்கித்தவிக்கையில்..


5 comments:

Yaathoramani.blogspot.com said...

ஏக்கத்தின் அவஸ்தையை
படிப்பவரும் உணரச் செய்து போகும்
அற்புதமான கவிதை
உவமைகள் மிகப் பொருத்தம்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வருண் said...

இந்த இணையதள முகநூல் உலகிலும் "ஹோம்சிக்னெஸ்" போகாதுபோல.. நம்முடைய அன்பு, கோபம், எரிச்சல் எல்லாவற்றையும் பெற்றோர்களிடம் மட்டுமே காட்ட முடியும். நெறையாச் செல்லம் கொடுத்து உங்களை இப்படி மிஸ்ப் பண்ண வச்சிட்டாங்க! :)

nila said...

நன்றி திரு. ரமணி அவர்களே

நன்றி வருண்.. நன்றி திரு. ரமணி அவர்களே

நன்றி வருண்.. வீட்ல கேட்குறேன் ஏன் இவ்ளோ செல்லம் குடுத்திங்கனு..இப்போ ரெண்டு வீட்டு செல்லம் வேற.. :)

Anonymous said...

வணக்கம்
கவிதையின் வரிகள் ரசிக்கும்படி மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

கையை உதறிவிட்டு
ஓடும் குழந்தையாய்
திசை மறந்து
ஓடிசெல்கின்றன நினைவுகள்

நினைவுகள் பின் ஓடித்திரியும் வாழ்க்கை ..!

Post a Comment