
அடைத்த கதவுகளின்
இந்தப்புரத்தில்
ஒரு இருண்ட பாலைவனம்
அதில்
அழுந்தப் புதைக்கப்பட்ட வலிகள்
வடிகால் தேடும் முயற்சியில்
இதற்கென என்றின்றி
எதற்கென வேணினும்
பெருகக் காத்திருக்கும்
கண்ணீரும்
நடுநிசித் தேடல்களில்
ஏமாறித் திரும்பி வந்த
வெறுங்கையும்
நித்தம் ஒரு பொருள் சொல்லி
வெறுப்பை விழுங்க வைக்க
பழுப்பேறிய நாட்களின்
மூடுபனித் துயரமென
ஊடலும் கூடலுமான நினைவுகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை உடைக்கும் வேளையில்
சலனமற்றத் தனிமையின்
பெருங்குரல் அரற்றலின்
எதிரொலியாய்
கழுத்தையிறுக்கும் பயம்
சோறுண்ண உயிர்வாழ
நீ நிறைந்திருக்கும்
தூரத்துக் கனவுகள் மட்டுமே
ஊக்கமாய்
நனவின் உணர்வுகள்
நலிந்துபோய் நான்..