Oct 18, 2012

கைகோர்த்த கனவுகள்

மீண்டும் மீண்டும்
படித்துவிட்டு
நாணுகிறேன்
முதல் கடிதத்தின்
வரிகளை மடித்தபடி...

தினமும் எண்ணிக்கையில்
நாள் ஒன்று குறைகிறது
கனவுகளை விகிதாசார முறையில்
நனவாக்கியபடி

தோழி செல்லமாய்
சலித்துக்கொள்கிறாள்
இன்னும் இருபது நாட்கள்
எனை பொறுக்க  வேண்டுமென..

அதரங்களின் ஓரத்தில்
தொக்கி நிற்கும் சிரிப்பே
சொல்லிடுமாம்
என் மூளை உலாவ சென்றிருப்பதை

நித்தமும் பரிகசிகிறாள்
ஏதேனும் சொல்லிச்சொல்லி
போடி... உனக்கென்ன புரியும்
என் கன்னத்து செங்காந்தள் பற்றி ??

இதோ அதோ என்று
நெருங்கியும்
தூரமாய் நிற்கும் நாளுக்காய்
 காத்திருக்கிறேன் கண்மூடி..

5 comments:

Unknown said...

Nice

வருண் said...

***இதோ அதோ என்று
நெருங்கியும்
தூரமாய் நிற்கும் நாளுக்காய்
காத்திருக்கிறேன் கண்மூடி..***

20 நாட்கள்தானே?
ரொம்பப் பக்கத்தில்தானே இருக்கு?
ஆனால் தற்போதிருக்கும் "தலைவியின்" மனவோட்டத்தோட, ஒளியே போட்டிபோட முடியாது!

ஆமாம், அவளின் எண்ணங்கள் ஒளியைவிட வேகமாக ஓடுவதால் 20 நாட்கள் இருபது யுகங்களாகத்தான் போகும்! :-)

நல்ல கவிதை! வழ்த்துக்கள், நிலா!

Subramanian said...

காத்திருப்பின் சுகத்தை இவ்வளவு அழகாக பதிவிட்டு ரசனையின் உச்சத்தை தொடவைத்துவிட்டீர்கள்! அருமை! அருமை!

maya said...

super feeling....

Ragu said...

fantastic lines..

Post a Comment