தூரத்தில் எங்கோ ஆலயத்தில்
மணி இருமுறை அடித்து
நிசப்தம் கலைத்துச் செல்கிறது..
பூட்டிய இருட்டறைக்குள்
இறுக மூடியக் கண்களுக்குள் மட்டும்
கலர் கலராய்க் கீற்றுக்கோடுகள்
காத்திருத்தல் தவம் முடித்த கனவுகள்
விடியலை ஒத்திப்போட்டபடியே
ஒவ்வொரு நிறமாய் வேடிக்கைக்காட்ட..
எனக்கு மட்டும் கேட்கும்படியாய்
என் காதருகில் வீனைத்தந்திகள்
மதுவந்தி மீட்டி மயக்க...கண்ணாமூச்சி காட்டிய பட்டாம்பூச்சி ஒன்று
முத்தாய்ப்பாய் முத்தமிட்டுச் சென்றது
வசந்தம் வந்த கதையை பறைசாற்றி.. !!!
3 comments:
வசந்தம் வந்த கதையை பறைசாற்றிய கவிதைக்கு பாராட்டுக்கள்.... !!!
நன்றி இராஜராஜேஸ்வரி
***பட்டாம்பூச்சி ஒன்று
முத்தாய்ப்பாய் முத்தமிட்டுச் சென்றது
வசந்தம் வந்த கதையை பறைசாற்றி.. !!!***
Sharing that "great news" doubles the pleasure of the butterfly, I suppose!
Post a Comment