May 27, 2009

என்னை மிகவும் சிந்திக்க வைத்த கேள்வி


தலைப்பை படிச்சதும் என்னவோ ஏதோனு நினைச்சுடதிங்க....
ரொம்ப சில்லியான கேள்வியத்தான் கேட்க போறேன்...
ரெண்டு நாள் முன்னாடி என் கதைல எழுதின மாதிரியே மெரினா கடற்கரைப் பேருந்து நிலையத்திலிருந்து அடையார் வரைக்கும் பல்லவன் தாழ் தள சொகுசுப் பேருந்தில் என் கதையைப் பற்றி சிந்தித்துக்கொண்டே பயணம் செய்துகொண்டிருந்தேன்...
திடீரென்று ஒரு வித்தியாசமான கேள்வி எனக்குள்... கதைல எழுதின மாதிரி பேருந்துக்கு யாராவது தீ வெச்சா எப்படி தப்பிக்கிறதுன்னு... எனக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு நினைச்சுக்காதிங்க...
பேருந்தை நோட்டம் விட்டதில் எளிதில் தப்பிப்பதற்கான வழிகளே இல்லாதது போல தோன்றியது... ஏனென்றால் தாழ் தள சொகுசு பேருந்தில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும்... சன்னல் வழியா தப்பிக்கிறதும் கொஞ்சம் சிரமமான காரியம்... எனக்கு இதுல இருக்குற டெக்னிகலான விஷயங்கள் எதுவும் தெரியாது... ரெண்டு நாலா மண்டைய குடைஞ்சுட்டு இருந்த கேள்வி இது... நம்ம நண்பர்கள்கிட்ட கிடைக்காத பதிலா??? அதான் இதை எழுதிட்டேன்... இப்படி ஒரு கேள்விய கேட்டதுக்காக பெரிய மனசு பண்ணி என்ன மன்னிச்சுட்டு கொஞ்சம் விளக்கம் குடுங்களேன் ப்ளீஸ்

13 comments:

நட்புடன் ஜமால் said...

இப்படி ஒரு கேள்விய கேட்டதுக்காக பெரிய மனசு பண்ணி என்ன மன்னிச்சுட்டு கொஞ்சம் விளக்கம் குடுங்களேன் ப்ளீஸ்\\

இப்படி ஒரு கேள்விய கேட்டதுக்கு மன்னிக்கிறதே பெரிசு தான் இதுல விளக்கம் வேறயா ...


(எப்படியோ எஸ்க்கேப்பு ...)

sakthi said...

இப்படி ஒரு கேள்விய கேட்டதுக்காக பெரிய மனசு பண்ணி என்ன மன்னிச்சுட்டு கொஞ்சம் விளக்கம் குடுங்களேன் ப்ளீஸ்

ஜன்னல் வழியா எட்டி குதிச்சுடுங்க நிலா முடியலைன்னா ரஜினி ஸ்டைல்ல உடைச்சிடுங்க

sakthi said...

என்னமா யோசிக்கறீங்க

அன்புடன் அருணா said...

விளக்கம் சொல்லத் தெரிலை.....ஆனால் யோசிக்க வேண்டிய கேள்வி.
அன்புடன் அருணா

nila said...

//இப்படி ஒரு கேள்விய கேட்டதுக்கு மன்னிக்கிறதே பெரிசு தான் இதுல விளக்கம் வேறயா ...


(எப்படியோ எஸ்க்கேப்பு ...)//

ஜமால் அண்ணா.... நீங்களே இப்படி சொல்லிட்டு எஸ்கேப் ஆனா எப்படிங்க்னா?????

nila said...

//ஜன்னல் வழியா எட்டி குதிச்சுடுங்க நிலா முடியலைன்னா ரஜினி ஸ்டைல்ல உடைச்சிடுங்க//

கொஞ்சம் அந்த படத்தை உத்து பாருங்க சக்தி.... சன்னல் வழியா எட்டி குதிக்கிற மாதிரியா இருக்கு.... மேலும் டிரைவருக்கு முன்னாடி இருக்குறது மட்டும்தான் கண்ணாடி... மத்ததெல்லாம் பைபர்...

nila said...

நன்றி அருணா

ஷாகுல் said...

பின் பக்கம் அவசர வழி கண்டிப்பாக இருக்கும்.
இது மாதிரியான பேருந்துகளில் ஜன்னலுக்கு குறுக்கே கம்பி இருக்க கூடாது.

கோவி.கண்ணன் said...

//சன்னல் வழியா தப்பிக்கிறதும் கொஞ்சம் சிரமமான காரியம்... எனக்கு இதுல இருக்குற டெக்னிகலான விஷயங்கள் எதுவும் தெரியாது... ரெண்டு நாலா மண்டைய குடைஞ்சுட்டு இருந்த கேள்வி இது... //

திரைப்படங்களில் வருவது போல், பேருந்தின் நடுவில் செங்குத்தாக கைப்பிடிக்க வைத்திருக்கும் இரும்பு கம்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விஜயகாந்த் வில்லனின் நெஞ்சில் எட்டி உதைப்பது போல் ஷூ அணிந்த கால்களால் ஒரே உதை யாரையாவது உதைக்கச் சொல்லி கண்ணாடியை உடைச்சி வெளி ஏறிவிடனும்.
:)

geethappriyan said...

கண்டிப்பாக எமெர்ஜென்சி எக்சிட் சன்னல் இருக்கும் , இங்கு அதற்கு மேல் உடைப்பதற்கு சுத்தியும் பொருத்தியிருப்பார்கள்.
நீங்கள் அங்கு சுத்தி இல்லை என்றால்
ஹை ஹீல்சு , டிபன் பாக்சு உபயோகியுங்கள்

இக்காலத்தில் பெண்கள் கராத்தே கற்றுக்கொண்டால்
எல்லாவற்றிர்க்கும் உபயோகம் தான்.

கில் பில் படத்தில் உமா துர்மனை பாருங்கள் புரியும்...
:))))))))

துபாய் ராஜா said...

//ஒரு வித்தியாசமான கேள்வி எனக்குள்... கதைல எழுதின மாதிரி பேருந்துக்கு யாராவது தீ வெச்சா எப்படி தப்பிக்கிறதுன்னு...//

கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்.

குட் கொஸ்டின்.

அடுத்த தடவை அதே பஸ்ல கொஞ்சம் டீசல், பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் அத்தோடு மறக்காம தீப்பெட்டியோட போய் யாருக்கும் தெரியாம தீ வைத்துவிட்டு யார்,யார் எப்படி தப்பிறாங்கன்னு கடைசி வரை இருந்து பார்த்துவிட்டு
தப்பிச்சு வந்தீங்கன்னா..... அந்த அனுபவத்தை ஒரு பதிவா எழுதுங்க.படிச்சி தெரிஞ்சிக்கிறோம்.

பஸ்ல தீ வைக்கும்போது யாராவது பார்த்து போலீஸ் கேஸானாலும் அந்த அனுபவத்தையும் ஒரு பதிவா போட்டுடுங்க.

முக்கியமா ஒண்ணு.'டிஜிட்டல்' கேமரா இல்லைன்னா கேமரா மொபைல் எடுத்துட்டு போக மறந்துறாதீங்க.படங்களோட 'லைவ் சவுண்ட்'டோட கலக்கலா பதிவு போட்டுடலாம்.எந்த ஒரு பதிவுன்னாலும் படங்கள் முக்கியம்.

சின்னக்கவுண்டர் செந்தில் மாதிரி ஏடாகூடமா இப்படி
எல்லாம் கேள்வி கேட்டா நாங்க இப்படித்தான் பதில் சொல்லுவோம். :))

பொன்மாறன் said...

சாத்தியமா என நினைக்கிற பொழுது எல்லாம் அசாத்தியமாகவே தெரிகிறது..
இங்கு கேள்வி தா.த.சொ பேருந்து பற்றி.. நம் Omni பேருந்துகள் பற்றி என்ன சொல்ல..
ஆனால் அவசியம் வருகிற போது எதுவும் தடையாக இருப்பதில்லை..
இரவு சுமார் 3 மணி. ஒரு பெருஞ்சத்தம் பேருந்தில் எல்லோர் தூக்கத்தையும் கலைக்கிறது. காற்றில் மண்ணெண்ணை வாசம்.. பேருந்து பற்றிக்கொள்ளும் எனவே உத்தேசித்தார்கள் என்னைச்சுற்றிப் பலரும்.. சன்னலில் தடுப்பாக கம்பி. ஏறும்போது கேட்டிருந்தால் ‘இது பீமனுக்கும் வலியது என்றிருப்பேன்’..
ஆனால் கோவி.கண்ணன் போல எனக்கும் ஒரு திடீர் யோசனை.. அது வேலையும் செய்தது.. ஆனால் உடைத்த எனக்கு முன்னால் இரண்டு பேர் குதிதுவிட்டார்கள் என்னை பின் தள்ளிவிட்டு.. நிதானித்து திரும்பி பார்த்தால், அடிபட்டு வெளியேற முடியாதவர்கள் தவிர பேருந்து காலியாகியிருந்தது.. இவையெல்லாம் நடந்து முடிய இதனை எழுதும் நேரம்கூட ஆகவில்லை..என்/அடிபட்டவர்கள் யோகம் பேருந்து பற்றிக்கொள்ளவில்லை.. நிற்க..
இதில் உங்களுக்கான ஒரே செய்தி - அவசியம் வரும்போது வழிகள் கண்ணுக்கு தெரியும்

Unknown said...

எங்களுக்கு எஞ்சியவை கவிதைகளும் இலக்கியங்களும்தான்
- ஈழநூல்கள் வெளியீட்டு விழாவில் உருக்கமான பேச்சு
-கூத்தலிங்கம்


http://www.natpu.in/natpu/Pakudhikal/Eelham/kalachuvadu.php

உங்கள் கிருபாகரன் நட்புக்காக kiruram@gmail.com

Post a Comment