Jul 9, 2025

இரவின் காதலி- 7

இரவு!

இமைகளுக்கு உள்ளும்
வெளியும் ஆழ்ந்த இருள்..

நினைவுகள் மட்டும் 
தொட்டுத் தொட்டு
தொடர்ந்து வரும்
வண்ணமில்லா நிழற்படமாய்..

சில..
இதமாய் கரையை‌
முத்தமிட்டுச் செல்லும் அலைகளாய்..

சில..
ஆர்ப்பரித்து ஓடி வந்து
மணலை அரித்துச் செல்லும்
அலைகளாய்..

மொத்தத்தில்
என் இரவுகள் அத்தனையும்
அமைதிக்குப் புறம்பாய்
இரைந்து கொண்டே இருக்கின்றன..

No comments:

Post a Comment