நிரம்பிக்கிடக்கிறது அலைபேசி
எழுதித் தீராத சொற்களுக்காகக்
காத்திருக்கின்றன மின்னஞ்சல்கள்
உலர்ந்து போன
முடிக்கப்படாத கவிதைகள்
கொட்டப்படாத உணர்வுகளோடுஅழுத்திக்கொண்டிருக்கும் பிரியம்
வதை முகாமென அதீதமாய் இம்சிக்கிறது
பசுவின் வலி காக்கைக்குப்
புரிய நியாயமில்லை
சின்ன சின்ன சீண்டல்களுக்கும்
செல்ல ஊடல்களுக்குமான
ஏக்கங்களையும்
வெளிப்படுத்தப்படாத
புதைத்து வைத்திருக்கிறேன்...
இஷ்டப்பட்டு கஷ்டப்படுகிறேன்
எரிமலை வெடிந்து கசிந்துவிடாமல்
வசம் இழந்துகொண்டிருக்கிறேன்...
என் நினைவுகள் உனக்கு மட்டுமல்ல
எனக்குமே வருவதில்லை...
உன் காலடி வரை வந்துஎன் நினைவுகள் உனக்கு மட்டுமல்ல
எனக்குமே வருவதில்லை...
ஸ்பரிசிக்காமலே திரும்பிவிடுகின்றன
உனக்கான என் பிரியங்கள்
உன் நினைவுகள் தூரத்தில்
ரயில் தண்டவாளத்தின் அதிர்வுகளாய்
நிம்மதியிழக்கச் செய்கிறது
எப்போதும் என்னை....
உன் ஒற்றைச் சொல்லை தலையசைப்பை
புன்னகையை எதிர்நோக்கியே
என் நாட்கள் விடி(மடி)கின்றன...
விடிகின்ற பொழுதுக்காய்
விழிதிறந்தே காத்திருக்கிறேன்...
விடியலின் வெளிச்சமுமென்னைவிழிதிறந்தே காத்திருக்கிறேன்...
பரிகசித்துப் போகிறது.
10 comments:
//உன் ஒற்றைச் சொல்லை தலையசைப்பை
புனைனகையை எதிர்நோக்கியே
என் நாட்கள் விடி(மடி)கின்றன...
விடிகின்ற பொழுதுக்காய்
விழிதிறந்தே காத்திருக்கிறேன்...
விடியலின் வெளிச்சமுமென்னை
பரிகசித்துப் போகிறது//
நிலா கவிதையின் முழுதுமான வலிகளும் இதற்குள் அடக்கம்.
ம்ம்ம்ம்
ஹேமா! சொல்லிட்டாங்க.
படம் இன்னும் வலு சேர்கின்றது வலிக்கு.
உன் காலடி வரை வந்து
ஸ்பரிசிக்காமலே திரும்பிவிடுகின்றன
உனக்கான என் பிரியங்கள்
உன் நினைவுகள் தூரத்தில்
ரயில் தண்டவாளத்தின் அதிர்வுகளாய்
நிம்மதியிழக்கச் செய்கிறது
எப்போதும் என்னை....
அருமையான வலி நிறைந்த வரிகள்
கவிதை மிகவும் உருக்கியது.
வரிகளினூடே உள்ள விளையாட்டு என்ன வசீகரித்தது.
அது என்ன பெண் கவிஞர்கள் எல்லாரும் இப்படி சோக ராகம் பாடுகிறீர்கள்.
//வெளிப்படுத்தப்படாத
உணர்வுகளையும் ஆழ
புதைத்து வைத்திருக்கிறேன்...//
//ஸ்பரிசிக்காமலே திரும்பிவிடுகின்றன
உனக்கான என் பிரியங்கள்//
வலியை உணரமுடிகிறது. எத்தனை ஆழம்!!!!
//விடிகின்ற பொழுதுக்காய்
விழிதிறந்தே காத்திருக்கிறேன்...
விடியலின் வெளிச்சமுமென்னை
பரிகசித்துப் போகிறது.//
கடினம்...
kalakal ! fantastic lines
//கண்ணீரை உள்ளிழுத்து
மௌனம் காக்கிறேன்//
நிலா,
மிகமிகச் சிறப்பான வெளிப்பாட்டுச் சொல்.
கை கொடுங்க முதல்ல.
வாழ்த்துகள்.
காதல் மிக நன்றாய் வருகிறது நிலாவுக்கு. அற்புதம்
Post a Comment