Mar 23, 2019

இரவின் காதலி-3

இரவுகள் இரக்கமற்றவை!!

சில நிகழ்வுகளின்
நினைவுகளை
நிழற்படம் காட்டிச்செல்வதில்!!

திடீரென குருடாகிப்போனவனின்
இருண்ட வானமென
கொக்கரித்துச் செல்வதில்!!

இறந்த காலத்தின்
நிதர்சனத்தை
மாயை என நம்பச்செய்வதில்!!

இரவுகள் இரக்கமற்றவை!!